பொலிஸ் வீதித்தடையில் கடமையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அசோக உபதிஸ்ஸ எனும் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி மாத்தளை - கண்டி வீதியின் பலகடுவ பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த சந்தர்ப்பத்தில் அவரை வனே் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாக்கி இருந்தது.
குறித்த வேன் ஓட்டுனர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..