20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இரகசியமாக அடக்கம் செய்யப்படுகின்றதா கொரோனா சடலங்கள்? நாடாளுமன்றில் ஆவேசப்பட்ட எம்.பி

கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகள் இரகசியமாக அடக்கம் செய்யப்படுகின்றார்கள் என்ற கருத்தை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி.ஜீ.எம்.கொஸ்தா திரும்பப்பெற வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

நேற்று (18)நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகள் இரகசியமாக அடக்கம் செய்யப்படுகின்றார்கள் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

கிண்ணியாவில் பொலிஸார் கடமையில் உள்ளனர். அதேபோல பாதுகாப்புப் படையினரும் கடமையில் உள்ளனர்.

சகல இறப்புகளும் உரிய - முறைப்படி பொலிசுக்கு அறிவிக்கப்பட்டு உரிய விசாரணைகளின் பின்பே அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் இவரின் பொறுப்பற்ற கருத்தை மிக வன்மையாக கண்டிக்கிறேன். பொலிசார், பாதுகாப்பு படையினர், சுகாதர வைத்திய அதிகாரி கொரோனல் களை தாண்டி எவ்வாறு இரகசியமாக அடக்கம் செய்ய முடியும்.






இரகசியமாக அடக்கம் செய்யப்படுகின்றதா கொரோனா சடலங்கள்? நாடாளுமன்றில் ஆவேசப்பட்ட எம்.பி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு