22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானம்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

இதனால் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்றவர்கள் கோரிக்கை விடுத்தால் அதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்த தயாராக இருக்கிறோம்.

கொரோனா கட்டுப்பாட்டுக்கான இறுதித் தீர்வு பயண கட்டுப்பாடு விதிப்பது அல்ல - இதற்கான தடுப்பூசியை வழங்குவதே சிறந்த தீர்வாகும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.





பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு