பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீண்ட நாட்களின் பின்னர் கண் கலங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு நேற்று காலை அலரிமாளிகையில் விசேட நிகழ்வு நடந்தது. இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ என பலரும் கலந்துகொண்டிருந்தனர். சமய அனுஷ்டானங்களின் பின்னர், அங்கு தர்ம போதனையை செய்த கொலன்னாவே சிறி சுமங்கல தேரர், கடந்த போர்க்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், படுகொலைகள் இடம்பெற்றபோது நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு ஆறுதல் கூறியமை, போரை நிறுத்துவதற்காக சபதத்தை ஏற்றமை போன்ற விடயங்களை நினைவுபடுத்தினார்.
அவற்றை கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கண்களில் இருந்து கண்ணீர்துளி வந்த காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.
இதேவேளை இறுதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வரான ரோஹித்த ராஜபக்ஷவை சி.எஸ்.என் விவகார வழக்கில் கைது செய்து விளக்கமறியல் உத்தரவுபெற்று சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றியபோது அவர் கண் கலங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..