"பயணக் கட்டுப்பாட்டு விதிமுறை மற்றும் சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாகப் பின்பற்றினால் இன்னும் இரண்டு வாரங்களில் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும்."
இவ்வாறு அரச வைத்திய அதிகாரி சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
"கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை அவதானித்துள்ளோம்.
இதன்பிரகாரம் இன்னும் 10 நாட்களில், நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, பயணக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை உரிய வகையில் தொடர்ந்தும் பின்பற்றுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு பின்பற்றினால் இன்னும் இரு வாரங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும்" - என்றார்.
0 Comments
No Comments Here ..