தென்னிலங்கையில் கர்ப்பிணி தாய் ஒருவரின் வயிற்றில் உயிரிழந்த 37 வார குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண பரிசோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பினித் தாய் குழந்தை பிரசவிப்பதற்காக காலி, மஹமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வயிற்றினுள் குழந்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த பின்னர் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் கொவிட் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தாய் புஸ்ஸ மஹமுதலிமாவத்தை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் கொவிட் வைத்திய சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர் குழந்தை பிரசவிப்பதற்காக மஹமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் குழந்தை வயிற்றுக்குள் உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் இந்த தாய் உட்பட குடும்பத்தில் ஏனைவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..