இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 947 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் பயணக்கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டுக்களுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..