மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணத்துக்கான காரணம் வெளியாகி உள்ளது.
குறித்த இளைஞன் ஐஸ் ரக போதைப்பொருளை அதிகளவில் விழுங்கியமையே அவரது உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த இளைஞருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை அடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
மேலும், குறித்த இளைஞன் 25 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்டடிருந்தார்.
இவருக்கு இன்று அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்திருந்தார்.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பில் பொலிஸாரின் காவலில் இருந்த இளைஞனின் உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது!
0 Comments
No Comments Here ..