15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பலில் ஏற்கனவே ஏற்பட்ட கசிவு - அம்பலமாகும் தகவல்கள்

எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் கட்டார் துறைமுகமொன்றின் அருகில் நின்றவேளையே கொள்கலன் ஒன்றில் கசிவு ஏற்பட்டது தெரியவந்ததாக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை இயக்கிய எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்மல் யாட்ஸ்கவிட்ஸ் தெரிவித்துள்ளார்.


கப்பலில் மாலுமிகளுக்கு நைட்ரிக் அசிட் கசிவது குறித்து தெரிந்திருந்ததாகவும் கொள்கலன்களை இறக்குவதற்கு இந்திய கட்டார் அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சனல்நியுஸ் ஏசியாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


கப்பல் பயணித்த பாதை குறித்து தெளிவுபடுத்தியுள்ள அவர், கொள்கலன்கள் பத்தாம் திகதி துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் ஏற்றப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.


கட்டாரின் ஹமாட் துறைமுகத்திற்கு அருகில் கப்பல் காணப்பட்டவேளை கசிவு குறித்து தெரியவந்தது நாங்கள் குறிப்பிட்ட கொள்கலன்களை இறக்க அனுமதி கேட்டோம்,ஆனால் தங்களிடம் அதற்கான ஆளணி இல்லாததால் அவர்கள் அனுமதிவழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


அதன் பின்னர் கப்பல் இந்தியாவில் உள்ள ஹசிரா துறைமுகத்திற்கு சென்றது அங்கும் நாங்கள் குறிப்பிட்ட கொள்கலன்களை இறக்க அனுமதி கேட்டோம், அங்கும் இதே காரணத்தை தெரிவித்து நிராகரித்துவிட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


இதன் பின்னர் மே 19 ம் திகதி எக்பிரஸ் பேர்ள் இலங்கைக்கு வந்தது,அடுத்தநாள் காலை புகைவெளியாவது கண்டுபிடிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதுவரையில் ஒரு கொள்கலனில் இருந்து மாத்திரம் கசிவு காணப்பட்டது என தெரிவித்த அவர் தீ மூண்டமைக்கான காரணம் என்னவென்பதை மதிப்பிடுவது கடினம் எனவும் தெரிவித்துள்ளார்.




எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பலில் ஏற்கனவே ஏற்பட்ட கசிவு - அம்பலமாகும் தகவல்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு