கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி - கண்டாவளை சுகாதார பணிமனையின் கீழ் உள்ள கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவருரே இன்று உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்றையதினம் திடீரென சுகவீனமுற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து அவரது உடல் வவுனியா கொண்டுசென்று தகனம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..