21,Jun 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் இதுவரை போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை வெளியானது!

நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.


அந்த வகையில் ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு (சுமார் 23 இலட்சம் பேருக்கு) தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேல் மாகாணம் உட்பட 9 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 23 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.


353,000 மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர். சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட 10 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளில் இருந்து 8 மாவட்டங்களுக்கு 25 000 தடுப்பூசிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படும்.


நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தலா 50,000 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


10 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு வந்து சேர உள்ளன. கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டதை நாளை பிலியந்தல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.




இலங்கையில் இதுவரை போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை வெளியானது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு