தொற்றுநோய் பரவல் காரணமாக, பாடசாலை கல்வி முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், 1,000 பாடசாலைகளை மாத்திரம் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டம் ஏனைய பாடசாலைகளுக்கு இயற்கை மரணத்தை ஏற்படுத்தும் என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் பாடசாலை கல்வி கொடிய தொற்றுநோயால் முற்றிலுமாக முடங்கியுள்ளதோடு, கல்வி பல கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது.
அவற்றில் பாடசாலைகள் மீண்டும் திறத்தல், சுமார் 60 சதவீத பாடசாலைகளின் மாணவர்களுக்கு மாற்று கல்வி முறை இல்லாமை, தேசிய பரீட்சைகளை நடத்த இயலாமை, 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சையை நடத்த இயலாமை மற்றும் இந்த தாமத்தினால் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு அவசரமாக தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், 1,000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் செயற்பாட்டிற்கே அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கொரொனா தொற்றுநோய் பரவியதால் காலவரையின்றி பாடசாலைகள் மூடப்பட்டுள்ள போதிலும், ஜூன் 10 நாளைய தினம், 1,000 தேசிய பாடசாலைகளை திறக்க அரசாங்கம் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 30 பேர் பங்கேற்கவுள்ள ஆரம்ப விழாவை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் குறிப்பிட்டுள்ளார்.
புனரமைக்கப்படும் தேசிய பாடசாலை ஒன்றின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படும் என கூறப்பட்டாலும், இதுவரை எந்தப் பாடசாலையும் இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும், மேலும் மூன்று இலட்ச ரூபாய் செலவில் பாடசாலையின் பெயர் பலகை தயாரிக்கப்பட்டு வண்ணம் தீட்டப்படுவதாக ஆசிரியர் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.
எந்தவொரு விஞ்ஞான அடிப்படையுமின்றி இந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 750ற்கும் மேற்பட்ட மாகாண பாடசாலைகள் இந்த நோக்கத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சில பாடசாலைகள் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்கு அமைய தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மேலும், அண்மையில் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பாக சூம் தொழில்நுட்பத்துடன் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன, சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையின் கீழ் கல்வி அதிகாரிகள் உதவியற்றவர்களாக இருந்தனர். இது கல்வி முறையை மேலும் அரசியலாக்குவதாகும்.
" நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான பாடசாலைகளின் பெரும்பாலானவை இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், அரசாங்கம் உண்மையில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய விரும்பினால், மாகாண சபைகளால் உருவாக்கப்பட்ட பிரபலமான பாடசாலைகளை மாத்திரம் தெரிவு செய்யக்கூடாது எனவும், பிற பிரபலமடையாத மற்றும் சிறிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்க
0 Comments
No Comments Here ..