உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் இலங்கைக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாகிஸ்தானிய உளவுப் பிரிவினர் இந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு தகவல் வழங்கியிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தொலைதொடர்பு வலையமைப்பினை ஒட்டுக் கேட்டதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தது என குறி;ப்பிடப்படுகின்றது.
இலங்கை தொடாபில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசிக் கொள்வதாக இலங்கை அதகிhரிகளுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் மொஹமட் சத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்தியா தகவல்களை வழங்கியிருந்தது என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானும் தாக்குதல் குறித்து எச்சரித்திருந்தது என சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
0 Comments
No Comments Here ..