07,Feb 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மிகப்பெரிய ஊழலை அம்பலப்படுத்தினார் அநுரகுமார திஸாநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 227 அதிசொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யும் விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ள நிலையில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடயம் அம்பலமாகியிருக்கின்றது.


இந்த 227 வாகனங்களுக்குமான கொடுப்பனவாகிய 18 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பிலான திறந்த கடன் பத்திரமானது வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்க முன்னரே தயார் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.


இதற்கமைய கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி குறித்த கடன் பத்திரம் திறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அமைச்சரவை அங்கீகாரமானது மே 18ஆம் திகதியே அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார்.


நாட்டில் பொருளாதார சரிவு, மக்களின் ஜீவநோபாய நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் இவ்வாறு வாகன இறக்குமதியை செய்திருப்பதன் ஊடாக மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.




மிகப்பெரிய ஊழலை அம்பலப்படுத்தினார் அநுரகுமார திஸாநாயக்க

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு