கொவிட் 19 காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து குழந்தை மருத்துவ நோய்கள் தொடர்பான சிறப்பு மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகளை பெறுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த கூட்டத்தில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்டவுடன், பல கட்டங்களில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது அவசியம் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதன்போது கருத்துரைக்கையில், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் , 11 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.
இந்த இயக்கத்தை வெற்றிகரமாகச் செய்ய 279,000 ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட 300,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதும் முக்கியம் என்று பெரேரா கூறினார்.
0 Comments
No Comments Here ..