எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து அத்தியாவசிய தேவைக்குள் அடங்கும் மின்சார கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார பொது சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் மாலக்க விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் எனினும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான தேவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்த ஒரு தீர்மானமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..