கடந்த ஆண்டு இடம்பெற்ற MT New Diamond கப்பல் சம்பந்தப்பட்ட கடல் தீவிபத்தை தொடர்ந்து, ஆமைகளின் இறப்பு எண்ணிக்கை வழக்கமான ஆண்டு சராசரியை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அத்திட்டிய வனவிலங்கு மறுவாழ்வு மையம் இதனை தெரிவித்துள்ளது.
"ஒரு வழக்கமான ஆண்டில், குழந்தை ஆமைகளின் இறப்புகளைத் தவிர்த்து, ஆண்டு முழுவதும் சுமார் ஐந்து ஆமை இறப்புகளை மட்டுமே பதிவு செய்கிறோம்.
2020ம் ஆண்டில், MT New Diamond கப்பல் தீ விபத்துக்கு முன்னர் மூன்று இறப்புகளை மட்டுமே பதிவு செய்துள்ளோம். தீ விபத்தைத் தொடர்ந்து, 15 இறப்புகள் பதிவாகியுள்ளன.
0 Comments
No Comments Here ..