அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
14ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த குறித்த அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடி காலம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த அனுமதிப் பத்திரங்கள் ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை எவ்வித தடங்கலுமின்றி முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை தேவையற்ற முறையில் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments
No Comments Here ..