அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாம் சிந்திக்க வேண்டிய இந்த நேரத்தில் சூழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சம்பந்தப்பட்ட சிறிய கட்சிகளை அரசாங்கத்தில் இருந்து நீக்குவதே அந்த சூழ்ச்சி.
எமக்கு பலத்தை கொடுத்த கட்சிகளை சேர்ந்த தலைவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க முயற்சித்து வருகின்றனர்.
அரசாங்கத்தில் இருந்து நீக்கும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அந்த நிலைமை ஏற்படலாம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..