நாடளாவிய ரீதியில் அனைத்து அஞ்சல் சேவைகளும் இன்று (21) முதல் மீண்டும் தொடங்கும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, குவிந்த கடிதங்களின் விநியோகம் இன்று முதல் தொடங்கும் என்று உதவி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை அனைத்து தபால் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு சேவை கிடைக்கும்.
சிறப்பு அரசு வர்த்தமானி அறிவிப்பால் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சேவைகளில் தபால் சேவையும் ஒன்றாகும்.
இதற்கிடையில், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கடிதங்கள் நாடு முழுவதும் தேங்கியுள்ளதாக தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
0 Comments
No Comments Here ..