மனிதர்களுக்கு பரவும் எல்பா மற்றும் பீட்டா ஆகிய கொவிட் மாறுபாடுகள் கொண்ட இரண்டு வகைகள் விசேட வெளவால்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு குறித்த ஆய்வு அறிக்கையை சர்வதேச vaccine சஞ்சிகையில் வெளியிட ஆராய்ச்சி குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2017ஆம் ஆண்டு Identification of Emerging Eqents என்ற தலைப்பின் கீழ் இந்த பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவ கூடிய வைரஸ் தொடர்பில் இலங்கையில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படம்டது.
கொஸ்லந்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வெளவால் குகையை அடிப்படையாக கொண்டு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்த ஆய்வுக்குழு உறுப்பினரான கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனத்தின் பேராசிரியரான தேஜானி பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு நடவடிக்கை்காக 395 வெளவால்களின் மாதிரிகள் சேர்க்கப்பட்டுள்ளது. விலங்குகளின் மாதிரிகள் மற்றும் மலக்குடலில் இருந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 33 வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..