நுரைச்சோலை பகுதியில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராணுவ கெப்டன் உட்பட 4 இராணுவ வீரர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை இராணுவம் கைது செய்து நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் கடந்த 30 நாட்களில் மற்றுமொரு இராணுவ சிப்பாயும் கைது செய்யப்பட்டிருந்தார்.
தனிப்பட்ட தகராறு தொடர்பாக ஒரு நபரின் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்ததாக அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
0 Comments
No Comments Here ..