15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேறொரு இணையத்தளத்தில் சிறுமியை விற்பனை செய்வதற்காக விளம்பரத்தை பிரசுரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சிறுமியை இணையத்தளத்தின் மூலம் பணம் கொடுத்து வாங்கியதற்காக மாலைதீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு அறையொன்றை வழங்கிய விடுதியொன்றின் முகாமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..