நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக இன்று காலை 10.02 அளவில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர்பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பஸில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்தில் அனைவரும் மேசைகளைத் தட்டியபடி வரவேற்றனர்.
அநேகமான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வது வழமை என்ற போதிலும் பசில் ராஜபக்ச முதலில் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..