25,Apr 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள், தொற்று குணமாகி இரு வாரங்களின் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே பயனுடையதாக அமையுமென பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,


கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் இல்லை. ஆனால், தொற்று அறிகுறிகளுடன் அல்லது தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் சூழலில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டாம்.


கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று சுகமடைந்து இரண்டு வாரங்களின் பின்னர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதே பயனுடையதாக அமையும்.


அவ்வாறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால் மாத்திரமே உரிய வகையில் எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகும். என்று விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.




கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு