கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தல, மிரிஸ்வத்தை பிரதேசத்தில் டெல்டா மாறுபாடினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கை மேற்கொள்ளும் வைத்திய மாணவன் என அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக அவர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இன்றைய தினம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.













0 Comments
No Comments Here ..