08,Apr 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் “டெல்டா” பரவும் அபாயம் அதிகம் உள்ளது! வெளிவந்த திடுக்கிடும் தகவல்

கொரோனா வைரஸின் "டெல்டா" திரிபு எதிர்காலத்தில் நாட்டில் அதிக அளவில் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.


பல்வேறு கொரோனா வகைகள் இப்போது உலகின் பல நாடுகளில் பரவி வருவதாகவும், அந்த வகையில் இலங்கையிலும் டெல்டா வகை பரவும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்

அனுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,


"டெல்டா வகை உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கையால் மட்டும் அதிலிருந்து விடுபட முடியும் என்று நான் நினைக்கவில்லை.


எனவே, எதிர்காலத்தில் டெல்டா நம் நாட்டில் அதிகம் காணப்படும் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், ஸ்புட்னிக் தடுப்பூசி டெல்டா வகைகளுக்கு எதிராக செயற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


எமது நாட்டில் தற்போது சைனோஃபார்ம், அஸ்ட்ராசெனெகா, மாடர்னா மற்றும் ஃபைசர் போன்றவை மக்களுக்கு போடப்படுகின்றன.


அநத வகையில் தடுப்பூசி பெறுபவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட, டெல்டா விகாரத்தால் பாதிக்கப்படுவது குறைவு. எனவே, தடுப்பூசி மிகவும் முக்கியமானது என்றார்.




இலங்கையில் “டெல்டா” பரவும் அபாயம் அதிகம் உள்ளது! வெளிவந்த திடுக்கிடும் தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு