நாடாளுமன்றில் கடந்த 20ம் திகதிமுன்வைக்கப்பட்டுள்ள “நிதி” என்ற யோசனை தொடர்பில் சட்ட வியாகியானம் கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த யோசனையின் பல உட்பிரிவுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படுவதாகவும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றும் உயர்நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று மனுதாரரான எரான் விக்ரமரத்ன கோரியுள்ளார்.
யோசனையின் 2, 3, 4, 5 மற்றும் 6 உட்பிரிவுகள் எந்தவொரு வரி, அபராதம் அல்லது வட்டி செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்து வரி மன்னிப்பை வலியுறுத்துகிறது. அல்லது 6 வது பிரிவில், எந்தவொரு விசாரணை அல்லது வழக்குகளிலிருந்து விலக்களிப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..