எதிர்வம் நாட்களில் நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய, மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் கடலானது கொந்தளிப்பாகவே காணப்படும். ஆகவே மீனவர்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுளள்து.
0 Comments
No Comments Here ..