சீனாவின் சிறந்த திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, தீய விடயங்களை நிராகரித்து சீரான வெளிவிவகாரக் கொள்கையை அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இணைய வழியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அவர், இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பாவுடன் நல்லுறவைப் பேண வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாங்கள் இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பாவுடன் நல்லுறவைப் பேண வேண்டும், தேவைப்படுவது ஒரு பொதுவான எதிர்க்கட்சி கூட்டணி அல்ல, மாறாக தேசத்தை புதுப்பிக்க நீண்ட கால கொள்கை கட்டமைப்பாகும்.
சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற பல நாடுகளைப் போலவே அரசியலமைப்பால் பாதுகாக்கப்படும் பொதுவான கொள்கைகள் எங்களுக்குத் தேவை.
ராஜபக்ச ஆதிக்க ஆட்சியை தோற்கடிப்பது ஒரு விடயம், தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஒரு நிலையான கொள்கை கட்டமைப்பை அமைப்பது மற்றொரு விடயம்.
ஒரு பொதுவான கொள்கை கட்டமைப்பை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்த ஆட்சியை தோற்கடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அத்தகைய கொள்கை கட்டமைப்பின் குறைபாடுகளே நல்லாட்சி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..