மாணவர்கள் இணையத்தின் மூலம் கல்வியில் தொடர்ந்து ஈடுபடுவதால் கண்களில் பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது என கொழும்பு கண் மருத்துவமனையின் சிறப்பு கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபானி வெவெல்ல தெரிவித்துள்ளார்.
இணைய வகுப்பின் போது குழந்தைகள் அவ்வப்போது கண் சிமிட்ட வேண்டும். இடைக்கிடையில் வெவ்வேறு திசைகளில் பார்க்க வேண்டும் என்றும் சிறப்பு மருத்துவர் கூறுகிறார்.
ஒரு மடிக்கணினி அல்லது தொலைபேசி திரையை நீண்ட நேரம் பார்த்தால் கண்கள் சிமிட்டுவதை நிறுத்தி, கண்களை உலர வைத்து விடும் என்றும் கூறினார்.
இணைய வகுப்பின் போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை கண்களை இலகுவாக்கி சுற்றி பார்க்க வேண்டும் என்றும் சிறப்பு மருத்துவர் கூறினார்.
0 Comments
No Comments Here ..