மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவைச் சேர்ந்த பல நாடுகளின் தூதர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு அண்மையில் நிதி அமைச்சகத்தில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் சவுதி அரேபியா, எகிப்து மற்றும் குவைத் நாடுகளின் தூதர்கள் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
இலங்கைக்கும் அந்த நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, பரஸ்பர ஒத்துழைப்பில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்த இலங்கை தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை அண்மையில் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளின் பிரதிநிதிகளையும் பசில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2.jpg)












0 Comments
No Comments Here ..