15,May 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு - பஸில் எடுக்கவுள்ள நடவடிக்கை

கொவிட் வைரஸ் பரவல் காரணமாக இலங்கை மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளுடன் கலந்துரையாடி உரிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இது பற்றி கருத்து வெளியிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக உரிய நாடுகளுடன் ராஜதந்திர அடிப்படையில் வெவ்வேறாக கலந்துரையாடப்பட்டவுள்ளது.

சுற்றுலா பயணிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரும்போது ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.





இலங்கை மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு - பஸில் எடுக்கவுள்ள நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு