தமது கல்வித் தகைமைகளை வௌிப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை என தகவல் அறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை வௌியிடுமாறு நாடாளுமன்ற உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போதைக்கு கல்வித் தகைமைகளை சமர்பித்துள்ள நபர்களின் தகவல்களையேனும் வெளியிடுமாறு ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தமது கல்வித் தகைமைகளை வௌிப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை என தகவல் அறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக இது குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு நாடாளுமன்ற அலுவல்களில் இருந்து பதில் கிடைப்பதில்லை எனவும் தகவல் இல்லை அல்லது தகவல் கிடைக்கவில்லை என்றே பதில் வருவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
"நீங்கள் இந்த தகவலை வழங்க தயாராக இருந்தால் உங்கள் கல்வி மற்றும் தொழில் தகைமைகளை இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து முடிந்தளவு விரைவில் அனுப்பவும் அது பொது மக்களின் கோரிக்கைகளின் போது சமர்பிக்க இலகுவதாக இருக்கும் இருக்கும்" என்று கூறி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்புமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு தகவல் அறியும் ஆணைக்குழு கூறியுள்ளது.
அதன்பின் நாடாளுமன்ற அலுவலர்கள் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது குறித்து எழுதி தங்களது கல்வித் தகைமைகளை அனுப்புமாறு கோரிக்கை முன்வைத்த போதும் இதுவரை ஒரு நடாளுமன்ற உறுப்பினர் கூட அதனை வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் குறித்து பொது மக்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாதுதென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதி ஒருவரின் கல்வித் தகைமை மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெரிந்து கொள்வது பொதுமக்களின் தகவல் அறியும் சட்ட உரிமை என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தகவல்கள் கோரப்படுவது தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றில் 2002ம் ஆண்டு வழங்கிய தீர்பான "ஒரு வெற்றிகரமான ஜனநாயகம் ஒரு 'விழிப்புணர்வு' கொண்ட குடிமகனை உருவாக்குகிறது" அந்த தகவல் பொது நலன் சார்ந்ததாகும். எம்.பி.க்கள் தொடர்பான கல்வித் தகுதி மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்களைப் பெறுவது, 'எம்.பி.க்களின் தனிப்பட்ட விவகாரங்கள்' பற்றிய தகவல்களைப் பெறுவது போன்றதல்ல" என்பதை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் அரசியலமைப்பின் 90 மற்றும் 91 வது பிரிவுகளின் படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான முன்நிபந்தனைகளாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற நிலையை நாடாளுமன்றம் எடுத்துள்ளது. அவர் தெரிவு செய்யப்பட்டால் நாடாளுமன்றம் நுழைய தகுதியானவர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5 (1) ன் படி, “கல்வித் தகுதி என்பது தனிப்பட்ட தகவலுடன் தொடர்புடையது, அதை வெளிப்படுத்துவது எந்த பொதுச் செயலுக்கும் அல்லது ஆர்வத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அல்லது பெரிய பொது நலன் அத்தகைய தகவல்களை வெளியிடுவதை நியாயப்படுத்தாவிட்டால் அல்லது சம்பந்தப்பட்ட நபர் அத்தகைய வெளிப்பாட்டிற்கு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்காவிட்டால், அது தனிநபரின் தனியுரிமையின் மீது தேவையற்ற தலையீட்டை ஏற்படுத்தும் ” என்று நாடாளுமன்றத்தின் உதவி பொதுச் செயலாளர் மற்றும் தகவல் அதிகாரி டிக்கிரி ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
எனினும் “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 5 (1) (ஏ) இல் உள்ள தடை வரம்பிற்குள் வரவில்லை, அதற்கு முதலில்,‘பொது செயல்பாடு அல்லது ஆர்வம்’ என்பதற்கு நேரடி தொடர்பு உள்ளது. அந்த பிரிவு மற்றும் இரண்டாவதாக அதன் விளைவாக, தனியுரிமையின் மீது 'தேவையற்ற' தலையீடு இல்லை, " என தகவல் அறியும் ஆணைக்குழு கூறியுள்ளது.
அதனால் "இலங்கை நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நாடாளுமன்றத்தில் கடமையாகும் என்பது எங்கள் கருத்து" என்று தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த கம்மன்பில, ஆணையாளர்களான கிசாலி பின்டோ ஜயவர்த்தன, எஸ்.ஜி.புஞ்சிஹேவா, செல்வி திருச்சந்திரன் மற்றும் நீதிபதி ரோஹினி வெல்கம ஆகியோர் அறிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..