திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் திரியாய் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் மற்றுமொரு யுவதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணிக்கு செல்வதற்கான பேருந்தை தவறவிட்டதால் அந்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற நிலையிலேயே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
0 Comments
No Comments Here ..