23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

10 நாட்களுக்கு நாட்டை முடக்காவிட்டால் வீதியோரங்களில் பிணங்களை குவிக்க வேண்டி வரும்!

இலங்கையை சுமார் 10 நாட்களுக்கு மூடப்படாவிட்டால், வரும் திங்கட்கிழமை முதல் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் ஒரு குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் உறுப்பினர் வசந்த சமரசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் உள்ள சுகாதார நிபுணர்கள் நாட்டை மூட வேண்டும் என்று வழியுறுத்துகின்றனர்.

மதத் தலைவர்களும் நாட்டை மூட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பொதுச் சுகாதார ஊழியர்களின் சங்கங்களும் நாட்டை மூடச் சொல்கின்றனர்.

ஆனால் அரசாங்கம் தன்னிச்சையாக நடந்து கொள்வதன் மூலம் இந்த நாட்டில் அதிக உயிர்கள் பலியாகின்றன.

இந்த நாட்டில் மக்கள் இறப்பதைத் தடுக்க 10 நாட்களுக்கு இலங்கை முடக்கப்பட வேண்டும்.

இதேவேளை, வருமானம் இல்லாத மக்கள் இரண்டு வாரங்கள் வீட்டில் தங்குவதற்கான வழிமுறைகளையும் அரசாங்கம் செய்ய வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றால் நாம் பலகோடி ரூபாய்களைக் குவித்துக் கொண்டு, வீதி ஓரத்தில் இறந்த உடல்களைக் குவிக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளனர்.  





10 நாட்களுக்கு நாட்டை முடக்காவிட்டால் வீதியோரங்களில் பிணங்களை குவிக்க வேண்டி வரும்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு