25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

சிறுவர்களைத் தாக்கும் ஆபத்தான புதிய நோய்- வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொவிட் தொற்றின் பின்னர் குழந்தைகளுக்கு புதிய வகை ஆபத்தான நோய் ஒன்று பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

தற்போது, ​​இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாட்டின் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இலங்கையில் கொவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்புக்கள் சார்ந்த அழற்சியுடன் தொடர்புடைய மிகவும்

ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது.


கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின் சில குழந்தைகள் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


தற்போது 35 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். காய்ச்சல் ஏற்படுவதன் மூலம் இந்த நோய் ஏற்படுவதாகவும் கண்கள் சிவத்தல், நாக்கு சிவத்தல் மற்றும் சருமத்தில் சிவப்பு நிற தழும்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது


இந்த நோய் மூளை கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தையும் பாதிக்கலாம். இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றும் விசேட வைத்தியர்

தீபால் பெரேரா தெரிவித்தார்.


இந்த நோய் சிறுவர்களுக்கு மத்தியில் இனங்காணப்பட்டாலும், கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முதியவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





சிறுவர்களைத் தாக்கும் ஆபத்தான புதிய நோய்- வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு