25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

யாழில் இன்று முதல் நடைமுறையாகும் விலையேற்றம்- வெளியான பட்டியல்!

யாழ்ப்பாணத்தில் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையேற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.


இதேவேளை ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக யாழ் .மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ஒரு இறாத்தல் பாணின் விலையை ஐந்து ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பணிஸ் வகைகள் ஆகக் கூடிய சில்லறை விற்பனை விலையாக ரீ பணிஸ், கொம்பு பணிஸ், பேஸ்ரி, சங்கிலி பணிஸ், ஜாம் பணிஸ், கறி பணிஸ், முக்கோண பணிஸ் என்பன 40 ரூபாயாகவும், கிறீம் பணிஸ் 50ரூபாவாகவும், அடைக் கேக் 30 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





யாழில் இன்று முதல் நடைமுறையாகும் விலையேற்றம்- வெளியான பட்டியல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு