நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை என பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன் போதிய உணவு கையிருப்பில் இருப்பதால், உணவுப் பற்றாக்குறை தொடர்பில் பீதியடைய வேண்டாம் எனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் அரிசி மற்றும் சீனிக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.
நாட்டு மக்களுக்கு தேவையான அரிசி மற்றும் சீனி தற்போது கையிருப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், உணவுப் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியை மறுத்துள்ளது.
மேலும், செயற்கை உணவு பற்றாக்குறையை தோற்கடிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..