அத்தியாவசிய உணவு வழங்கல் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அமுலில் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று மாற்று கொள்கைகளுக்கான மையம் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது.
மேலும் அவசரகால நிலையை சாதாரண சட்ட ஆட்சிக்கு மாற்றாக கருதக்கூடாது என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே அவசரகால சட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அமுலில் இருக்க வேண்டும் என்று மையம் கூறியுள்ளது.
போட்டித்தன்மையற்ற நடைமுறைகளைத் தடுக்க போதுமான பாதுகாப்புடன் கூடிய சட்டம் இயற்றப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் மற்றும் அவசரகால விதிமுறைகளைப் பயன்படுத்துவது பயனுள்ள நுகர்வோர் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு அல்லது சட்டத்தால் வழங்கப்பட வேண்டிய வேறு எந்த நடவடிக்கைகளுக்கு மாற்றாக இருக்கக்கூடாது என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் குறிப்பிட்டுள்ளது.
2021 ஆகஸ்ட் 30 ஆம் திகதி, வர்த்தமானி மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது பாதுகாப்பு ஆணையின் பிரிவு 2ன் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் நிலவும் அவசரநிலையைக் கருத்தில் கொண்டு சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளின் பொது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
0 Comments
No Comments Here ..