21,Sep 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

ஒருவார காலத்திற்குள் இடம்பெறவுள்ள இராஜினாமா - உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது

ஒருவார காலத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து மத்திய வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அவரே தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அதனடிப்படையில் அவர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளேன். பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான தருணத்தில் உள்ளதால் என்னை மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

நான் அதனை ஏற்றுக் கொண்டுள்ளேன். ஒருவார காலத்திற்குள் மத்திய வங்கி ஆளுநராக பெறுப்பேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவும் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் கூறுகையில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், இராஜாங்க அமைச்சருமான அஜித் நிவாட் கப்ரால் விரைவில் மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நான் அவரிடம் வினவினேன். மத்திய வங்கியின் ஆளுநராக பெரும்பாலும் தான் பெறுப்பேற்க உள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் கூறினார்.

அத்துடன் நாடு தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியை சிறப்பாக நிர்வகிக்க வேண்டிய தேவை உள்ளது என்றார். நிதி முகாமைத்துவம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

எனவே அனுபவமுள்ள அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். அவர் ஆளுநராக விரைவில் பொறுப்பேற்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, நிதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமையவே இராஜாங்க அமைச்சர் பதவியை அர்ப்பணிப்பு செய்துவிட்டு மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இதேவேளை அஜித் நிவாட் கப்ராலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்கப்படுமென்பது தொடர்பில் கட்சி தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார். 








ஒருவார காலத்திற்குள் இடம்பெறவுள்ள இராஜினாமா - உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு