14,Jul 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் அஜித்!

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான தீர்மானித்துள்ளார்.

அதன்படி விலகல் கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளார்.

அவர், மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு அமைச்சரவை அமைச்சரின் அதிகாரம் கிடைக்க உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதால் வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு தெரிவுசெய்யப்படும் நபர் தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேநேரம், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநராக பதவி வகிக்கும் பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன், எதிர்வரும் செவ்வாய்கிழமை அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் அஜித்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு