நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமைி் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணியின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் தனது ருவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
0 Comments
No Comments Here ..