குடிபோதையில் மிகவும் மோசமான முறையில் செயற்பட்ட பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மதுபான நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் குடிபோதையில் வன்முறை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையே இதற்கு காரணமாகும். அதற்கமைய 52 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குடிபோதையில் குழப்பம் ஏற்படுத்தி காயமடைந்தவர்களில் 5 பெண்களும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் 17 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
மதுபான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் அதனை விளைவுகளை உணர முடிந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..