பைசர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதன் பின்னர் ஏதாவது பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அறிவிக்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே பெண்கள் மற்றும் சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இதற்காக 24 மணி நேரமும் 070 270 3954 என்ற தொலைபேசி இலக்கம் செயற்பாட்டில் இருக்கும் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்தும் வைத்தியசாலை வெளியிட்டுள்ள தகவல் படி,* தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டதன் பின்னர் சிறுவர்கள் காய்ச்சல் ஏற்பட்டால், பரசிற்றமோல் (பணடோல்) மாத்திரை ஒன்றை பயன்படுத்த முடியும்.
* சிறுவர்கள் களைப்படையும் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை தவிர்க் வேண்டும்.
இதேவேளை, சிறுவர்களின் மத்தியில் கொரோனா பரவல் குறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
டெல்டா திரிபு பரவலுடன் கொரோனா தாக்கத்திற்கு உள்ளான 200இற்கும் அதிகமான சிறுவர்கள் சிகிச்சைப் பெற்றுவந்திருந்தனர்.
தற்போது இவர்களின் எண்ணிக்கை 50ஆக குறைவடைந்துள்ளதாக சிறுவர் வைத்திய சாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..