ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நான்கு மணியின் பின்னர் ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துவதற்கு தேவையான அனைத்து திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அண்மையில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக துறைகளுக்குப் பொருத்தமான திட்டங்களை குறித்த நிறுவனங்களினால் இதுவரையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைவாக ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிக்கு நாட்டை திறப்பதற்கு தேவையான நடைமுறைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனேவே, ஊரடங்குச் சட்டத்தினை நீக்கி நாட்டை திறந்த பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய சுகாதார விதிமுறை தொடர்பில் அனைத்து வழிக்காட்டல்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..