மாத்தளை மாவட்டத்தில் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 465 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய உக்குவளை பிரதேசத்தில் 113 பேரும்,
ரத்தோட்டை பிரதேசத்தில் 71 பேரும்,
யட்டவத்தை பிரதேசத்தில் 44 பேரும்,
களேவள பிரதேசத்தில் 26 பேரும்,
தம்புள்ள மாநகரசபை பிரிவில் 14 பேரும்,
மாத்தளை பிரதேசத்தில் 48 பேரும்,
தம்புள்ளை பிரதேசத்தில் 27 பேரும்,
நாவுள பிரதேசத்தில் 9 பேரும்,
அம்பங்கங்க கோரல பிரதேசத்தில் 20 பேரும்,
பள்ளேபொள பிரதேசத்தில் 5 பேரும்,
வில்கமுவ பிரதேசத்தில் 24 பேரும்
மாத்தளை பிரதேசத்தில் 48 பேரும்,
லக்கல பிரதேசத்தில் 4 பேரும், மொத்தமாக 465 பேர் இதுவரை கோவிட் -19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை 17,862 பேர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக மாவட்ட சுகாதார காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..