01,Nov 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

பாடசாலைகளை மீள திறக்கும் போது எவ்வாறு இயக்க வேண்டும்? வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்

கோவிட் தொற்று நோய் பரவல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது கல்வி செயற்பாடுகள் உறுதியான, வலுவூட்டப்பட்ட அணுகுமுறைகளுடன் இயக்கப்பட வேண்டும் என்று கண்டி தேசிய அடிப்படை கல்வி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அதுல சுமதிபால தெரிவித்துள்ளார்.

இது ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று “கோவிட் தொற்றுநோய், மாணவர்கள் மற்றும் அவர்களின் கல்வி” என்ற தலைப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே பேராசிரியர் சுமதிபால இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கூறுகையில், 

பாடசாலை மாணவர்கள் கோவிட் காரணமாக மந்தமான கல்வி மற்றும் மந்தமான மனநிலைக்கு ஆளாக நேரிடும்.

எனவே இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க அனைத்து பிரிவினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.





பாடசாலைகளை மீள திறக்கும் போது எவ்வாறு இயக்க வேண்டும்? வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு