முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இவ்வழக்கு நேற்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொகமட் இர்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் அதிகாரிகளான உபாலி லியனகே மற்றும் நீல் ரவீந்திர முனசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..