09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

அமெரிக்காவில் 2020 ஆண்டின் முதல் மரண தண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவில், மனைவியைக் கொன்ற கணவருக்கு, இந்த ஆண்டின் முதல் மரண தண்டனை, நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஜான் கார்ட்னர், 64, தன் ஐந்தாவது மனைவி டாம்மி கார்ட்னரை, தாக்கி கொடுமைகளை இழைத்துள்ளார். இதையடுத்து, டாம்மி கார்ட்னர், விவாகரத்திற்கு பதிவு செய்தார். இதனால், ஆத்திரமடைந்த ஜான் கார்ட்னர், தன் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இந்த வழக்கில், கடந்த, 2006ம் ஆண்டு, ஜான் கார்ட்னருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த வருடம் செப்டம்பரில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், ஜான் கார்ட்னர் தரப்பு வழக்கறிஞர்கள், மேல்முறையீடு செய்தனர். எனினும், அவரது மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது.

இந்நிலையில், ஜான் கார்ட்னருக்கு, விஷ ஊசி செலுத்தப்பட்டு, மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில், இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட, முதல் மரண தண்டனை இதுவாகும். கடந்த, 2019ம் ஆண்டில், அமெரிக்காவில் மொத்தம், 22 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




அமெரிக்காவில் 2020 ஆண்டின் முதல் மரண தண்டனை நிறைவேற்றம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு